lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

kaalam endra koduran - zenem lyrics

Loading...

அவள் மீது கொண்ட காதலின் ஆழத்தை தொட்ட மறு கணம்
என்னை விட்டு பிரிந்தாள்
அந்த பிரிவும் அழகாய் இருந்தது

அப்பிரிவின் வலியை அவ்வழகு துடைத்தது
அக்கனவின் கணத்தை இக்காலம் கரைத்தது

நான் மீண்டும் வருவேன்
நீ மீண்டு வருவாயா?
நான் மீண்டும் வருவேன்
நீ மீண்டு வருவாயா?

நெஞ்சில் கொண்ட காதலும்
கையில் பிடித்த காதலி
வாழ்க்கை எனும் தோட்டத்தில்
நான் பூக்க மறந்த பூச்செடி

கண்ணில் கண்ட கனவுகள்
கண்ணாடி போல சிதறிய
வாழ்க்கை பிம்பம் அழித்தவன்
காலம் என்ற கொடூரன்

சோகம் தேடும் கண்ணீர் போல
வெறுத்து ஓடுது மனம்
தாகம் தேடும் தண்ணீர் போல
சிரிப்பை நாடுது கணம்
நான் மீண்டும் வருவேன்
நீ மீண்டு வருவாயா?
நான் மீண்டும் வருவேன்
நீ மீண்டு வருவாயா?

மனித இனத்தை நிறத்தால் நிரப்பி வந்தால் ஓர் நிறம் போதுமா?
காவியும் இன்றி காரும் இன்றி வானவில் பூசலாம் வா காலத்தை வெல்லலாம் வா

வஞ்சி படர்ந்த மனசிது
எஞ்சி இருக்கும் உணர்வினை
செல்வம் எனும் மோகத்தில்
நான் சிதைத்து சிதைந்து போகிறேன்

பிஞ்சில் பிறந்த உறவுகள்
பஞ்சாய் இங்கு எரியுதே
மனித உணர்வை அழித்தவன்
காலம் என்ற கொடூரன்

சோகம் தேடும் கண்ணீர் போல
வெறுத்து ஓடுது மனம்
தாகம் தேடும் தண்ணீர் போல
சிரிப்பை நாடுது கணம்

நான் மீண்டும் வருவேன்
நீ மீண்டு வருவாயா?
நான் மீண்டும் வருவேன்
நீ மீண்டு வருவாயா?
மீண்டு வருவாயா?
மீண்டு வருவாயா?
மீண்டு வருவாயா?
மீண்டு வருவாயா?

காலம் என்ற கொடூரன்
இவன் காலம் என்ற கொடூரன்
காலம் என்ற கொடூரன்
இவன் காலம் என்ற கொடூரன்

சோகம் தேடும் கண்ணீர் போல
வெறுத்து ஓடுது மனம்
தாகம் தேடும் தண்ணீர் போல
சிரிப்பை நாடுது கணம்

Random Song Lyrics :

Popular

Loading...