kanavae kalaigirathe - yuvan shankar raja & bhavatharini lyrics
கனவே கலைகிறதே காற்றென வலிகள் நுழைகிறதே.
தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே.
காதல் இது தானா உலகெல்லாம் வலிகள் பொது தானா.
மனசுக்குள் அணில் பிள்ளை போல அழுவதும் அது தானா.
வார்த்தைகளை மௌனம் கொன்று தின்றதில்.
தனிமையிலே தினம் கத்தி கத்தி உன்தன் பேர் சொல்லி அழுறேனே…
காற்று வந்து காதல் சொன்னதா
இது தானா காதல் இது தானா
வேரரும்பே வீசும் புயல் தானா
இது தானா காதல் இது தானா
அனு அனுவாய் சாகும் வழிதானா
கனவே கலைகிறதே காற்றென வலிகள் நுழைகிறதே.
தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே.
காதல் இது தானா உலகெல்லாம் வலிகள் பொது தானா…
மனசுக்குள் அணில் பிள்ளை போல அழுவதும் அது தானா…
அழைப்பது காதல் நீரா
அறியாத பறவைக் கூட்டம்
தொடு வானம் போலே காதல்
அழகான மாயத் தோற்றம்
உனக்கான வார்த்தை அநியாயம் சிறையில் வாழ்கின்றதே
நமக்கான வின்மீன் நீ அறியும் முன்னே உதிர்கிறதே
தரையில் மோதி மழைத்துளி
விரலினை தேடி இமையோடு கண்ணீர் காயும்
வலிக்கிற போதும் சிரிக்கின்ற நானும்
உனக்காக நாளும் தேய்கிறேன்…
சரி தானா காதல் பிழைதானா
ஆயுள் வரை தொடரும் வலி தானா
இது தானா காதல் இது தானா
ஐம்புலனில் ஐயோ தீ தானா
மழைநீர் சுடுகிறதே மனசுக்குள் அணில் பிள்ளை அழுகிறதே
தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே.
Random Song Lyrics :
- why me - bennettboy lyrics
- she love this pimpin - t balla lyrics
- 그때 그 아이들은 (will last forever) - akdong musician lyrics
- lost - renato lyrics
- pete intro - pete rock lyrics
- that bird - role model lyrics
- sata vuotta - herra ylppö & ihmiset lyrics
- 10k facebook exclusive - jasko47 lyrics
- the lie - hawxx lyrics
- super hero - bloody jay lyrics