lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

maaradha - vivek lyrics

Loading...

ஹேய் ஆயிரம் கோடிகள் அடித்தவனை
காத்திட வழி இருக்கு
பசியினில் ஏங்கிடும் ஏழைக்குதான்

சிறையினில் இடம் இருக்கு

விண்கலம் படைத்திட நிதி இருக்கு
கழிவறை நமக்கெதற்கு

ஆலைகள் அமைத்திட நிலம் இருக்கு
வயல் வெளி நமக்கெதற்கு

கீழ் வானம் வானம் விடியாதா
உன்னால் உன்னால் முடியாதா
உண்மை உந்தன் துணை என்றால்
வெற்றி உன்னை அடையாதா எழடா

ஹேய் காலம் மாறாதா, காட்சி மாறாதா
ஒன்றாய் நாம் நின்றால் ஆட்சி மாறாதா

வாழ்க்கை மாறதா
சோகம் மாறாதா
மாற்றம் நாம் என்றால் எல்லாம் மாறாதா

பல பல ஆயிரம் கோடிகள் அடித்தவனை
காத்திட வழி இருக்கு
பசியினில் ஏங்கிடும் ஏழைக்குதான்
சிறையினில் இடம் இருக்கு

விண்கலம் படைத்திட நிதி இருக்கு
கழிவறை நமக்கெதற்கு

ஆலைகள் அமைத்திட நிலம் இருக்கு
வயல் வெளி நமக்கெதற்கு

கண்ணீரின் அர்த்தம் மாற கண்டோம்
இன்பங்கள் நெஞ்சில் ஏற கண்டோம்

சிறு சிறு சிறு விழியிலே
பெரும் பெரும் பெரும் கனவுகள்
அதை தடுத்திடும் தடைகளை
உடைப்போமா உடனே

பல பல பல அரசியல்
அதை எதிர்த்திட புறப்படு
புதிதென ஒரு சரித்திரம்
படைத்திட எழடா உடனே

நான் என்று சொல்லும்போது ஒட்டாது உதடு
நாம் என்று கத்தி சொல்லி போராடடா
போராளி இனமடா
ஓ ஹோ ஓ நாளை நமதடா

ஹேய் காலம் மாறாதா, காட்சி மாறாதா
ஒன்றாய் நாம் நின்றால் ஆட்சி மாறாதா

வாழ்க்கை மாறதா
சோகம் மாறாதா
மாற்றம் நாம் என்றால்
எல்லாம் மாறாதா

போராளி இனமடா…
நாளை நமதடா…

Random Song Lyrics :

Popular

Loading...