poovasam - vijay prakash lyrics
பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி
பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்
கோடு கூட ஓவியத்தின் பாகமே
ஊடல் கூட காதல் என்று ஆகுமே
ஒரு வானம் வரைய
நீல வண்ணம்
நம் காதல் வரைய
என்ன வண்ணம்
என் நெஞ்சத்தின் இடம் தொட்டு
விரல் என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா…
பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது
உற்றுப் பார்க்கும் ஆணின் கண்ணில் உள்ளது
பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது ஆண்தொடாத பாகம் தன்னில் உள்ளது
நீ வரையத்தெரிந்த ஒரு கவிஞன் கவிஞன்
பெண் வசியம் தெரிந்த ஒரு கலைஞன் கலைஞன்
மேகத்தை ஏமாற்றி மண்சேரும் மழை போலே
மடியோடு விழுந்தாயே வா…
பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி…
Random Song Lyrics :
- луантен (luanten) - vaitov lyrics
- roozaye behtar - dayan lyrics
- ley de atracción - khaled (los santos) lyrics
- off white - 3win$ lyrics
- not wasting time - fusia lyrics
- bussy bussy bussy - the boys (sts) lyrics
- breathe - dylan reese lyrics
- guardian angel - amazing rhythm aces lyrics
- are you even real - weval lyrics
- burn ya - young nudy lyrics