yutham (david vs goliyath) - tripla music lyrics
goli :
எத்தனை முறை, ஆறு முறை
எத்தனை பெற, சாகும்வரை சண்டைபோட்டு வெற்றிபெற்றேன் நான்
அசுரவீரன் கோலியத்தை உரசிப்பார்க்க வீரன் இல்ல பக்கத்து ஊரை கேட்டு பாரு வா
மோதிப்பார்க இஸ்ரவேலில் யார், படுக்கப்போட்டு உதைக்கப்போறேன் ஜெயிக்கபோறேன் நான் வா
மோதிப்பார்க இஸ்ரவேலில் யார், மூடமுடிச்ச கட்டிவந்து சரணடைய பார்
david:
என்னோட ஆடு ஒன்றை கரடி வந்து பிடித்தது முன்ன
விடாம தொரத்திப்போய் கரடி வாய கிழித்தது உண்மை
உன்னை போல் ஆயிரங்கள் பாத்துவிட்டோம் அடிக்கடி இங்க
பாதுகாக்க இரும்புக்கவசம் எனக்கு அவசியம் இல்ல
இந்த இஸ்ரவேலை அடிமையென்று நினைக்குமுன்ன
கொஞ்சம் யாருகிட்ட மோதுறான்னு கேட்டுக்கோ மெல்ல
முன்னால நடந்தவைகளை கொஞ்சம் எடுத்துவிட்டேன்
எதுக்கு சண்டைனு உட்கார்ந்து யோசிப்ப
goli:
ஆள் பாதி, காலில் பாதி, அதிபதி
நாள் பார்த்து டைம் குறித்து எழுதப்போறேன் தலைவிதி
பாடி கூத்தாடி போடப்போறேன் சரவெடி
பூச்சிமாரி நடுக்க எனக்கு ஒருநொடி
david:
உண்மைய சொல்லப்போனா சாகப்போற சற்குள் உள்ள
கத்தி தேவையில்ல கரடிபோன்ற மனிதன் வெல்ல
யுத்தம் எனதல்ல வேதவர்த்த மனசுக்குள்ள
காற்றும் கடலெங்கே யேசுவுடைய பேரை சொல்ல
கற்கள் பைக்குள்ள தேவைப்பட்ட கவனுக்குள்ள
மக்கள் கைதட்ட நடுவுல நான் சாட்சிசொல்வேன்
தேவன் அழைத்தார் என்னை உற்றார் உறவு இல்ல
ஏய் ! தகுதி இல்ல சின்னப்பையன் ஜெயிப்பேன் உன்ன
goli:
முகத்தை பார்த்து பயந்து ஓடும் கூட்டத்துல
சொல்லு யார்நம்பி வந்த இந்த ஆட்டத்துல
david:
சொல்லுறேன் நான் வணங்கும் தெய்வம் இந்த இடத்தில பார்க்கப்போற
இஸ்ரவேலை காக்கும் தெய்வம் யாறுஎன்று காட்டப்போறேன் வா நீ
நேற்றுவரைக்கும் மேய்ப்பனென்று ஆள பாத்து மோது
மேய்ப்பனுக்கு மேலஒருவர் தாள பார்க்கிறார்
ஆசைதீர பேசிக்கோ நீ மாலை கோர்க்கும்முன்ன
ராட்சசன வீழ்த்திட்டோம்னு பாடல் பாடும்முன்ன
goli:
பேச்ச கொறைச்சிக்கோ கடைசிஆசை என்ன இருந்தாலும் மனசில் நெனச்சிக்கோ
நெனச்சிப்பார்க உயிரு இருக்குமோ
மூச்சை புடிச்சிக்கோ நெனச்சுப்பார்த்தாலும் தப்பிக்க முடியுமோ
பயமா இருந்தா தப்பிச்சி ஓடிக்கொ
வா.. வா..வா..நெருங்கி வா
வா..வா..வா.. அருகில் வா
உன்னோட பேசி பேசி நேரமெல்லாம் வீனா போச்சி
வா.. வா..வா..நெருங்கி வா
வா..வா..வா.. அருகில் வா
உன்னோட கண்ணுமுன்னா காட்டப்போறேன் கடைசி காட்சி
david:
கிட்டவா கிட்டவா நெத்தியில் போட்டுத்தான் திட்டமா கொட்டுவேன் விழுவ செத்தபடி
கிட்டவா கிட்டவா நெத்தியில் போட்டுத்தான் திட்டமா கொட்டுவேன் மகனே நெத்தியடி
Random Song Lyrics :
- feuer (anniversary edition) - metrickz lyrics
- deus eu quero mais do teu espírito - ednalva reis lyrics
- snow, yesterday - macksy lyrics
- titelblatt - load tronic lyrics
- beni siz delirttiniz - çağlar bilgehan lyrics
- makes me bleed - nearxun lyrics
- humanity's wins - animaniacs lyrics
- roaches - luluyam lyrics
- excavation crisis - strange dust lyrics
- solo tú - dylan kai lyrics