mullai malar mele - t. m. sounderarajan & p. susheela lyrics
பெ: முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுந்தன் அன்பாலே
உள்ளம் உறவாடுதுந்தன் அன்பாலே
ஆ: வெள்ளியலை மேலே
துள்ளும் கயல் போலே
வெள்ளியலை மேலே
துள்ளும் கயல் போலே
அள்ளி விழி தாவக் கண்டேன் என் மேலே
பெ: முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
பெ: வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே
வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே
கண்ணெதிரில் காணுகின்றேன் பிரேமையினாலே
ஆ: மின்னல் உருமாறி மண்மேலே கன்னியைப் போலே
மின்னல் உருமாறி மண்மேலே கன்னியைப் போலே
அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே
ஆ …ஆ… ஆ…
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
பெ: விந்தை மிகும் மகுடி முன்னாலே நாகத்தைப் போலே
விந்தை மிகும் மகுடி முன்னாலே நாகத்தைப் போலே
எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே
எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே
ஆ: சிந்தை நிலை மாறினதாலே எந்தன் முன்னாலே
செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே
பெ: ஆ… ஆ …ஆ…
ஆ/பெ: முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
படம்: உத்தமபுத்திரன் (1958)
இசை: ராமநாதன்
வரிகள்: டி.கே.சுந்தர வடையார்
பாடகர்கள்: டி.எம்.செளந்தராஜன், பி.சுசீலா
Random Song Lyrics :
- no inicio não acreditei - rita de cássia lyrics
- quando deus quer - vanilda bordieri lyrics
- que trabalho é esse? - paulinho da viola lyrics
- as promessas que não falham - harpa cristã lyrics
- tardes de verão - banda passarela lyrics
- ao pé do monte - actos 2 lyrics
- ser de jesus - novo tom lyrics
- in your eyes (once in a while i do look at you) - akon lyrics
- a parábola do vento - lauriete lyrics
- convite de amor - kelly lopes lyrics