yaarivan - sundar c. babu lyrics
யாரிவன்… யாரிவன்… யார் இவனோ
அன்புக்கு முகவரி தருபவனோ
மனதை யாருமே சாவியை போட்டு பூட்டிட முடியாதே
ஒற்றை பார்வையில் உள்ளம் திறக்குமே
தடுத்திட முடியாதே
காதல் என்பது விதையை போன்றது
புதைத்திட முடியாதே
மனதை மோதியே மெல்ல முளைக்குமே
உனக்கது தெரியாதே
யார் இவனோ…
உன் விழி ஈரம் உன் மனப் பாரம்
எல்லாம் அறிந்தானா
இதற்கென தானோ பூமியில் அவனை
இறைவன் படைத்தானா
புயலுக்கு நடுவில் பூக்கள் பூப்பது
உணர்ந்திட சொன்னானா
உனக்கொரு உண்மை சொல்வேன் கண்ணோ
நீயே அவன் தானா
யார் இவன் யார் இவன் யார் இவனோ…
உனை வென்று உன்னை முpட்கும் போர் இவனோ
பெண்ணோ உன் வாழ்க்கையின் வேர் இவனோ
உன் பேரின் பின்னால் வரும் பேரிவனோ
உலகினில் இனி விழியென்னும் சொல்லை
உனக்கினி அந்த வானம் எல்லை
உலகினில் உனை வெல்ல யாரும் இல்லை
வாடா வாடா
உழைப்பவன் விழி உறங்குவது இல்லை
துணிந்தவன் வழி இறங்குவது இல்லை
வேர்வையில் வரும் வெற்றிக்கிங்கே ஆழம்
இல்லை வாடா
பருந்தை போல தினம் மேலேறு
புலியை போல தினம் நீ சீறு
உனது பேரை சொல்லும் வரலாறு முன்னேறு
தடையை பார்ப்பதில்லை காட்டாறு
இடையில் எங்கும் அது நிற்க்காது
முடிவு உனக்கு இனி கிடையாது இனி நடை போடு
யாரிவன் யாரிவன்… யார் இவனோ…
அணை தாண்டி தாவி வரும் நீ இவனோ
யாரிவன் யாரிவன்… யார் இவனோ…
யாரோடும் மோதி பார்க்கும் வேரிவனோ
யாரிவன் யாரிவன் யார் இவனோ……
தீமைக்கும் நன்மை செய்யும் நல்லவனோ
உன் திசை வீசும் காற்றினை
யாரும் திரும்பிட முடியாதே
முடியாதே……
விசை உள்ள பந்து மேலே எழுமே
அழுத்திட முடியாதே…
முடியாதே…
தசைவினில் உனக்கு தேடல் இருந்தால்
தோல்விகள் கிடையாதே
தகதகதகவென எரிவாய் நண்பா
அணைத்திட முடியாதே
Random Song Lyrics :
- volpe - acquacheta lyrics
- sex online - the happy yew lyrics
- kill the revivalist - hail your highness lyrics
- swarms - new luna lyrics
- double down - bike routes lyrics
- window shopper freestyle - kr$na lyrics
- 8lines2hell - chetta lyrics
- your eyes on me - supamoon lyrics
- yo mismo - amarion lyrics
- trap packs - sgat gang lyrics