naan varuvean - sathyaprakash feat. aishwarya ravichandran lyrics
நான் வருவேன் வருவேன் உயிரே, போகாதே போகாதே
வான் முடியா பயணம் போவோம், ஏங்காதே ஏங்காதே
இந்த கணமே கணமே கணமே இன்னும் தொடராதே
புது சுகமே சுகமே சுகமே மனம் கேட்கிறதே
என் ரணமே ரணமே ரணமே கொன்று குவிக்காதே
எனை தினமே தினமே தினமே என் தேவதை
வா வா தூர நிலா தூரம் அதை பார்த்திருப்போம்
வா வா காலமில்லா காதல் அதில் வாழ்ந்திருப்போம்
வா வா கை விரலை கை பிடிக்குள் மூடிவைப்போம்
வா வானம் வரை நாம் நடப்போம்
வலி தரும் காயம் தீயாய் மாறும் நேரமே
மனம் அதை பார்த்துக் கொண்டால் மாயாமாகுமே
அதே கணம் மீண்டும் வந்தால்
அதே சுகம் தேடி வந்தால்
மனோதிடம் கூடும் இங்கே பேரன்பிலே
நீ நதியோடு பேசு
சிறு முகிலொடு பேசு
உன் மனம் இன்னும் குழந்தை
அதை தாலாட்டிப் பேசு
எதிர் பார்க்காத ஒன்று
நீ நினைக்காத நேரம்
உன் கை வந்தால் பேரின்பமே
வா வா தூர நிலா தூரம் அதை பார்த்திருப்போம்
வா வா காலமில்லா காதல் அதில் வாழ்ந்திருப்போம்
வா வா கை விரலை கை பிடிக்குள் மூடிவைப்போம்
வா வானம் வரை நாம் நடப்போம்
அம்பரசீமா கண்டுவரவே
அம்பரசீமா கண்டுவரவே
ஒரு மதுர நிரன மதுனிதோம் தோம் தோம்
அம்புஜ நேத்ர சந்திர வதனே கத மோர்காதினி
மழை வெயிலாக வீசி போகும் வாழ்விலே
வழி எங்கும் நீயே வந்தாய் அன்புக் குடைகளாய்
உனக்கென வாழ வேண்டும்
உனதென மாறவேண்டும்
அழைத்திடும் தூரம் வாழ்ந்தால் போதும் நெஞ்சமே
உன் ஆள்காட்டி விரலால் அடி நீ காட்டும் திசையில்
இனி என் வாழும் போகும் கண்ணே
வா வா தூர நிலா தூரம் அதை பார்த்திருப்போம்
வா வா காலமில்லா காதல் அதில் வாழ்ந்திருப்போம்
வா வா கை விரலை கை பிடிக்குள் மூடிவைப்போம்
வா வானம் வரை நாம் நடப்போம்
நீ வருவாய் என நான் இருந்தேன், போகாதே போகாதே
வான் முடியா பயணம் போவோம், ஏங்காதே ஏங்காதே
இந்த கணமே கணமே கணமே இன்னும் தொடராதே
புது சுகமே சுகமே சுகமே மனம் கேட்கிறதே
என் ரணமே ரணமே ரணமே கொன்று குவிக்காதே
எனை தினமே தினமே தினமே என் தேவதை
வா வா தூர நிலா தூரம் அதை பார்த்திருப்போம்
வா வா காலமில்லா காதல் அதில் வாழ்ந்திருப்போம்
வா வா கை விரலை கை பிடிக்குள் மூடிவைப்போம்
வா வானம் வரை நாம் நடப்போம்
Random Song Lyrics :
- hypnotized - sylvan lyrics
- se tudo mudar - diana lima lyrics
- no me falta na' - jairoglyphz lyrics
- mistakes - l!bra lyrics
- videogames - lake malawi lyrics
- the dozens - jasen & bknott lyrics
- oh love - tiavo lyrics
- big enough - kj-52 lyrics
- real talk - gram (gran regal) lyrics
- antiheroic - minority blues band lyrics