
megankal ennai thottu - amarkalam - ramani bharadwaj, lyrics
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்
மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல
எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே
என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்
எரியும் உடலென்று தெரியும் பெண்ணே
என் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன்
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
கண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில்
என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்
துண்டு துண்டாய் உடைந்த மனத் துகளையெல்லாம்
அடி தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன்
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே
அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்
செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்
அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்
எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன்
அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்
இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டே
என் இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம்
மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி
ஓடி ஓடிப் போகாதே ஊமைப்பெண்ணே
நாம் உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்
மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல
எரி அமிலத்தை வீசியவர் யவருமில்லை!!
– வைரமுத்து
Random Song Lyrics :
- proud of me - zeegye lyrics
- racer - killxora lyrics
- 1738 freestyle - pi'erre bourne lyrics
- nikako - profit lyrics
- bot - qvxno lyrics
- the road (live at middle farm studios) - we are the ocean lyrics
- maybeck - tumaggz lyrics
- draymond - patio records lyrics
- сад (sad) - loukii lyrics
- new year's eve - lauryn marie lyrics