lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

nenjukulle - radhan lyrics

Loading...

நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய்
நான் உன்னை கொஞ்சம் கோர்த்து வைத்தேன்
என்னோடு…

கண்ணுக்குள்ளே நீ கரைந்தாய்
நான் உன்னை என்னில் மூடி வைத்தேன்
அன்போடு…

சொல்லடா சொல்லடா
என்னை விட்டு விலகி தூரமாய்
போனதேன்…
நில்லடா நில்லடா
உந்தன் அன்பில் வாழ்ந்து கொள்கிறேன்
நானுமே…

நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய்
நான் உன்னை கொஞ்சம் கோர்த்து வைத்தேன்
என்னோடு…

நீ… இருந்த போதும் இழந்த வாழ்வை தேடினேன் தேங்கினேன்
நான்… இறுதி வரையில் எந்தன் அன்பில் உன்னை தாங்குவேன்

வா… உனது இரவும் எனது கனவும் சேருமே சேருமே
உன்… அருகில் வாழும் இந்த இன்பம் நாளும் வேண்டுமே

இருளும் அது விலகி புதிய வெளிச்சம் ஒன்று பூக்குதே
இதயம் அது துடிப்பதற்கு அர்த்தம் கொஞ்சம் கூடுதே

உருகினேனோ நான் உடைகிறேனோ
உந்தன் அன்பினாலே கரைகிறேனோ
மீண்டும் உன்னை சேர்வதென்றால்
நான் இன்று கூட பிரிந்து போவேன்…
என் அன்பே…

மீண்டும் உன்னை பிரிவதென்றால்
நான் இந்த நொடியே இறந்து போவேன்
உன் முன்பே…

போதுமே போதுமே இந்த பந்தம் ஒன்று போதுமே
போதுமே…
வாழுமே வாழுமே நூறு ஜென்மம் எந்தன் ஜீவனும்
வாழுமே…
மீண்டும் உன்னை சேர்வதென்றால்
நான் இன்று கூட பிரிந்து போவேன்
என் அன்பே…

பரவசம் பரவசம் நெஞ்சிலே பரவுதே
எந்தன் தேகம் உந்தன் வாசம் வீசிகின்றதே
புது சுகம் புது சுகம் என்னை வந்து சூழுதே
உந்தன் பார்வை ஒன்றில் நானும் வீழுகின்றதே

அலையோ தாலாட்டு பாட
கடலும் கரை சேர்ந்ததே
என்னுள் நீ உன்னை தேட
கவிதை உருவானதே

உண்மை சொன்னால் வேறென்ன வேண்டும்
எந்தன் மூச்சில் உந்தன் சுவாசம் ஒன்று போதும்

நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய்
நான் உன்னை கொஞ்சம் கோர்த்து வைத்தேன்
என்னோடு…

போதுமே போதுமே இந்த பந்தம் ஒன்று போதுமே
போதுமே…
வாழுமே வாழுமே நூறு ஜென்மம் எந்தன் ஜீவனும்
வாழுமே…
வாழுமே… வாழுமே…

Random Song Lyrics :

Popular

Loading...