karuppu nila - k. s. chithra lyrics
கருப்பு நிலா கருப்பு நிலா
கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்
கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்
சின்ன மானே மாங்குயிலே
உன் மனசுல என்ன குறை
பெத்த ஆத்தா போல் இருப்பேன்
இந்த பூமியில் வாழும் வர
எட்டு திசை யாவும் கட்டி அரசாள
வந்த ராசா நீதானே
கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்
பத்து மாசம் மடியேந்தி
பெத்தெடுத்த மகராசி
பச்ச புள்ள உன்ன விட்டு
போனதென்னி அழுதாயா
மாமன் வந்து என்னை காக்க
நானும் வந்து உன்னை காக்க
நாம் விரும்பும் இன்பம் எல்லாம்
நாளை வரும் நமக்காக
காலம் உள்ள காலம்
வாழும் இந்த பாசம்
பூ விழி இமை மூடியே
சின்ன பூவே கண்ணுறங்கு
கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்
வண்ண வண்ண முகம் காட்டி
வானவில்லின் நிறம் காட்டி
சின்ன சின்ன மழலை பேசி
சித்திரம் போல் மகனே வா
செம்பருத்தி மலர் போலே
சொக்க வெள்ளி மணி போலே
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன
கண்மணியே மடிமேல் வா
பாட்டு தமிழ் பாட்டு பாட
அத கேட்டு ஆடிடும் விளையாடிடும்
தங்க தேரே நீதானே
கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்
கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்
யே மானே மாங்குயிலே
உன் மனசுல என்ன குறை
பெத்த ஆத்தா போல் இருப்பேன்
இந்த பூமியில் வாழும் வர
எட்டு திசை யாவும் கட்டி அரசாள
வந்த ராசா நீதானே
கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்
Random Song Lyrics :
- angeline - walk the moon lyrics
- blush - boundaries lyrics
- to nie my - joda lyrics
- va tutto bene - gemelli diversi lyrics
- turn up - king ernst lyrics
- róża z betonu 5 - tomb lyrics
- ego - tom gangue lyrics
- l.f.w (lost for words) - pagne lyrics
- beit sefer - בית ספר - ofek peretz - אופק פרץ lyrics
- white night - up10tion lyrics