aasai patta - hariharan & vishali lyrics
ஆச பட்ட எல்லாத்தையும்
காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்கமுடியுமா
நீயும்
அம்மாவ வாங்க முடியுமா
ஆச பட்டஎல்லாத்தையும்
காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா
நீயும்
அம்மாவ வாங்க முடியுமா
ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும்
தாய் போலே தாங்கமுடியுமா
ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும்
தாய் போலே தாங்கமுடியுமா
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாய்யடா
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாய்யடா
ஆச பட்டஎல்லாத்தையும்
காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா
நீயும்
ல லல…
பட்டினிய கெடந்தாலும்
பிள்ளைக்கு பால் கொடுப்பா
பால் குடிக்கும் பிள்ள முகம்
பாத்தே பசி நெறப்பா
இள வட்டம் ஆன பின்னும்
எண்ண தேச்சு குளிக்க வைப்பா
உச்சி முதல் பாதம் வர
உச்சி கொட்டி மகிழ்ந்திடுவா
நெஞ்சிலே நடக்க வைப்பா
நெலாவ பிடிக்க வைப்பா
பிஞ்சு விரல் நகம்கடிப்பா
பிள்ளை எச்சில் சோறு திம்பா
பல்லு முளைக்க
நெல்லுமுனையால்
மெல்ல மெல்லதான் கீறி விடுவா
பல்லு முளைக்க
நெல்லுமுனையால்
மெல்ல மெல்லதான் கீறி விடுவா
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாய்யடா
ஆச பட்டஎல்லாத்தையும்
காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா
நீயும்
அம்மாவவாங்க முடியுமா
மண்ணில் ஒரு செடி மொளைச்சா
மண்ணுக்கு அது ப்ரசவம்தான்
உன்ன பெற துடி துடிச்சா
அன்னைக்கு அது பூகம்பம்தான்
சூரியன சுத்திகிட்டே
தன்னை சுத்தும் பூமி அம்மா
பெத்தெடுத்த பிள்ளையை சுத்தி
பித்து கொள்ளும் தாய்மை அம்மா
கர்பத்தில் நெளிந்த உன்னை
நுட்பமாய்தொட்டு ரசிப்பா
பேதை போல் அவள் இருப்பா
மேதையாய் உனை வளர்ப்பா
என்னவேண்டும்
இனி உனக்கு
அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு
என்ன வேண்டும்
இனிஉனக்கு
அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாய்யடா
ஆச பட்டஎல்லாத்தையும்
காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா
நீயும்
அம்மாவ வாங்க முடியுமா
ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும்
தாய் போலே தாங்கமுடியுமா
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாய்யடா…
Random Song Lyrics :
- frei - young richie rich lyrics
- sorry mom, but i'm a rapper - schama noel lyrics
- qué quieres tú de mí - luz casal lyrics
- best that i can - vance joy lyrics
- christian lady - michael reed barker lyrics
- no morira (no matter what) - dark latin groove lyrics
- si no estás... - despistaos lyrics
- chemical - jack garratt lyrics
- no feelings - mardy price lyrics
- nie mehr broke - remoe lyrics