akkam pakkam - kireedam - g.v. prakash kumar lyrics
அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன்
அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன்
தினம் உன் தலைகோதி
காதோரத்தில் எப்போதுமே உன்
மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்!
கையோடு தான் கைகோர்த்து நான்
உன் மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன்!
வேறென்ன வேண்டும் உலகத்திலே!!!
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே!!!
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்!
அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
நீயும் நானும் சேரும் முன்னே
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே!
நேரம் காலம் தெரியாமல்
நெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதே!
உன்னால் இன்று பெண்ணாகவே
நான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்துகொண்டேன்!
உன் தீண்டலில் என் தேகத்தில்
புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன்!
வேறென்ன வேண்டும் உலகத்திலே!!
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே!!
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
அக்கம் பக்கம் யாருமில்லா
பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
நான நன… நான நன… நானா…… ன நானா
நான நன… நான நன… நானா…… ன நானா
Random Song Lyrics :
- deep end - brayan del angel lyrics
- lessons on pretend - yasmin nur lyrics
- пенисы freestyle - alwayshighcity lyrics
- durch lit - ino_dicht lyrics
- no scams! no eduardo! - habanero silver lyrics
- obanai & mitsuri - илья бара (ilya bara) lyrics
- woke up - destroy lonely lyrics
- jamás (versión 30 pegaditas) - los acosta lyrics
- со мною (with me) - hxmer lyrics
- the first time ever a saw your face - luke evans lyrics