lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

yaar yaaro - bharadwaj lyrics

Loading...

யார் யாரோ விதைச்ச நிலம் நான் விதைச்சது
யார் யாரோ குடிச்சத் தணணீ நான் குடிச்சது
யார் யாரோ விதைச்ச நிலம் நான் விதைச்சது
யார் யாரோ குடிச்சத் தணணீ நான் குடிச்சது
யார் யாரோ விட்ட காத்து நான் இழுத்தது
யார் யாரோ பொதச்ச காடு போகப் போறது

இதில் என்னதுன்னு ஏதுமில்ல ஞானத் தங்கமே
இதில் உன்னதுன்னும் ஏதுமில்ல ஞானத் தங்கமே

யார் யாரோ விதைச்ச நிலம் நான் விதைச்சது
யார் யாரோ குடிச்சத் தணணீ நான் குடிச்சது

பெத்தவெங்க சாயிறாங்க நமக்கு முன்னமே
பெத்ததுங்க பிரியுதுங்க கண்ணு முன்னமே

சோறு போல தீர்ந்து போச்சு சொந்த பந்தமே
என்ன சுட்ட காட்டில் விட்டுட்டீயே ஞானத் தங்கமே

வொடம்போடப் பொறந்த காலு வொடம்போடப் பொறந்த கையி
வொவ்வொன்னாப் பிரியும் போது ஞானத் தங்கமே
இதில் வொறவு மட்டும் நிலைக்குமா அடி ஞானத் தங்கமே

யார் யாரோ விதைச்ச நிலம் நான் விதைச்சது
யார் யாரோ குடிச்சத் தணணீ நான் குடிச்சது
பொருள வித்து மனுசன் வாங்கும் காலம் போனதே
மனுசன் வித்து பொருள வாங்கும் காலமாச்சுதே

கொடுமையிலும் கொடுமை என்ன ஞானத் தங்கமே
அது முதுமையிலே தனிமை தானே ஞானத் தங்கமே

நான் ஒதுங்க கூரை இல்ல
நன்றி காட்ட நாதி இல்ல
சாவக்கூடக் கூவிப் பார்த்தேன் ஞானத் தங்கமே
அந்த சாவு எங்கோ செத்துப் போச்சு ஞானத் தங்கமே

யார் யாரோ யார் யாரோ

யார் யாரோ விதைச்ச நிலம் நான் விதைச்சது
யார் யாரோ குடிச்சத் தணணீ நான் குடிச்சது
யார் யாரோ விட்ட காத்து நான் இழுத்தது
யார் யாரோ பொதச்ச காடு போகப் போறது

இதில் என்னதுன்னு ஏதுமில்ல ஞானத் தங்கமே
இதில் உன்னதுன்னும் ஏதுமில்ல ஞானத் தங்கமே

யார் யாரோ விதைச்ச நிலம் நான் விதைச்சது
யார் யாரோ குடிச்சத் தணணீ நான் குடிச்சது

Random Song Lyrics :

Popular

Loading...