lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

maargazhiyil - bharadwaj lyrics

Loading...

மார்கழியில் குளிச்சுப் பாரு குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு வறும பழகிப் போகும்
உப்பில்லாம குடிச்சுப் பாரு கஞ்சி பழகிப் போகும்
பாயில்லாம படுத்துப் பாரு தூக்கம் பழகிப் போகும்
வறுமையோட இருந்து பாரு வாழ்வு பழகிப் போகும்
சந்தோசத்த வெறுத்துப் பாரு சாவு பழகிப் போகும்

மார்கழியில் குளிச்சுப் பாரு குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு வறும பழகிப் போகும்

என்னோட சொத்தெல்லாம் தொலச்சுப்புட்டேன்
இப்ப எம்பேரில் ஒலகத்தையே எழுதிக்கிட்டேன்
துறவிக்கு வீடு மனை ஏதுமில்ல
ஊருக் குருவிக்கு தாசில்தார் தேவையில்ல

சில்லுனு காத்து சித்தோட ஊத்து
பசிச்சாக் கஞ்சி
படுத்தா உறக்கம்
போதுமடா போதுமடா போதுமடா சாமி
நான் சொன்னாக்க வல இடமா சுத்துமடா பூமி

மார்கழியில் குளிச்சுப் பாரு குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு வறும பழகிப் போகும்

காசுபணம் சந்தோஷம் தருவதில்ல
வைரக் கல்லுக்கு அரிசியோட ருசியுமில்ல
போதுமென்னும் மனசப்போல செல்வமில்ல
தன் பொண்டாட்டி போல ஒரு தெய்வமில்ல
வேப்ப மர நிழலு
விசிலடிக்கும் குயிலு
மாட்டு மணிச் சத்தம்
வயசான முத்தம்

போதுமடா போதுமடா போதுமடா சாமி
அட என்னப் போல சுகமான ஆள் இருந்தாக் காமி

மார்கழியில் குளிச்சுப் பாரு குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு வறும பழகிப் போகும்
உப்பில்லாம குடிச்சுப் பாரு கஞ்சி பழகிப் போகும்
பாயில்லாம படுத்துப் பாரு தூக்கம் பழகிப் போகும்
வறுமையோட இருந்து பாரு வாழ்வு பழகிப் போகும்
சந்தோசத்த வெறுத்துப் பாரு சாவு பழகிப் போகும்

Random Song Lyrics :

Popular

Loading...