7.thooki vidubavar - benny joshua lyrics
தூக்கிவிடும் தேவன் நீர்
என் சத்துரு முன் வெட்கப்படாமல்
காக்கும் தேவன் நீரே
என் உயிரை மட்டும் அல்லாமல்
என் ஆத்துமாவையும்
மீட்டவர் நீரே
என்னை தூக்கிவிடுபவர்
எனவே
உந்தன் பெயரை
புகழ்ந்து பேசாமலும்
பாடாமலும் இருக்க முடியாதே
என்னை எப்பொழுதும்
தூக்கிவிடுவதால்
என்னால் செய்யக்கூடியது
உம்மை புகழ்ந்து
உயர்த்துவது மட்டுமே
தூக்கி விடுபவர் நீரே
தூக்கிவிடும் தேவன் நீர்
நான் எந்த நிலையில் இருந்தாலும்
என்னை தூக்கிவிடுபவர் நீரே
என் குறையிலிருந்து
என்னை மீட்கும் தேவன் நீர்
நீரே என் தேவன்
என்னை தூக்கிவிடுபவர்
எனவே உந்தன் பெயரை
புகழ்ந்து பேசாமலும்
பாடாமலும் இருக்க முடியாதே
என்மேல் எப்பொழுதும்
உம் அன்பை பொழிவதால்
என்னால் செய்யக்கூடியது
உம்மை புகழ்ந்து
உயர்த்துவது மட்டுமே
உம்மை தவிர
யாரால் என்னை
உயர்த்த முடியுமோ
நினைத்து பார்க்க முடியா உயரங்களில்
தூக்கி உயர்த்துபவர் நீரே
உம்மை தவிர
யாரால் என்னை
உயர்த்த முடியுமோ
நினைத்து பார்க்க முடியா உயரங்களில்
தூக்கி உயர்த்துபவர் நீரே
உந்தன் பெயரை
புகழ்ந்து பேசாமலும்
பாடாமலும் இருக்க முடியாதே
என்மேல் எப்பொழுதும்
உம் அன்பை பொழிவதால்
என்னால் செய்யக்கூடியது
உம்மை புகழ்ந்து
உயர்த்துவது மட்டுமே
உம்மை புகழ்ந்து
உயர்த்துவது மட்டுமே
உம்மை புகழ்ந்து
உயர்த்துவது மட்டுமே
Random Song Lyrics :
- roads - fire & flesh lyrics
- feel enough - amias lyrics
- come to me - dana key lyrics
- gatti'n'roll!! - 岩崎慧[セカイイチ] lyrics
- rise - ariel petrie lyrics
- step to the left - nena marcella lyrics
- anxiety - lil bisay lyrics
- storm (version française) - mc12 lyrics
- hairline - cammfoxboy lyrics
- pegaz - kubańczyk lyrics