lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

mudhal mudhalai - benny dayal lyrics

Loading...

முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
விழியின் ஓரம் வழிந்தது இன்று
முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து

விழியின் ஓரம் வழிந்தது இன்று
முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து
மழையை போலே பொழிந்தது இன்று
உயிருக்குள் ஏதோ உணர்வு பூத்ததே
அழகு மின்னல் ஒன்று அடித்திட
செவிக்குள் ஏதோ கவிதை கேட்குதே
இளைய தென்றல் வந்து என்னை மெல்ல தொட
முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
விழியின் ஓரம் வழிந்தது இன்று
முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து
மழையை போலே பொழிந்தது இன்று

தீயும் நீயும் ஒன்றல்ல எந்த தீயும் உன் போல
சுடுவதில்லை என்னை சுடுவதில்லை
வேண்டாம் வேண்டாம் என்றாலும்
விலகி போய் நான் நின்றாலும்
விடுவதில்லை காதல் விடுவதில்லை
ஓ தநனனனான தநனனனான
இது ஒரு தலை உறவா
இல்லை இருவரின் வரவா ஆ
என்றாலும் பாறையில் பூ பூக்கும்
முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
உனது விழியின் வழிந்தது இன்று
முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து
மழையை போலே பொழிந்தது இன்று

மேற்கு திக்கில் ஓரம்தான்
வெயில் சாயும் நேரம்தான்
நினைவு வரும் உந்தன் நினவு வரும்
உன்னை என்னை மெல்லத்தான்
வைத்து வைத்து கொள்ளத்தான்
நிலவு வரும் அந்தி நிலவு வரும்
அடி இளமையின் தனிமை அது கொடுமையின் கொடுமை
எனை அவதியில் விடுமோ இந்த அழகிய பதுமை
கண்ணே என் காதலை காப்பாற்று
முதலாய் முதல் முதலாய்
முதல் முதல் முதலாய்
முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
விழியின் ஓரம் வழிந்தது இன்று
முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து
மழையை போலே பொழிந்தது இன்று
உயிருக்குள் ஏதோ உணர்வு பூத்ததே
அழகு மின்னல் ஒன்று அடித்திட
செவிக்குள் ஏதோ கவிதை கேட்குதே
இளைய தென்றல் வந்து என்னை மெல்ல தொட

Random Song Lyrics :

Popular

Loading...