
engae endru povathu - anirudh ravichander, shakthisree gopalan lyrics
எனக்கே என்று போவது?
யாரை சொல்லி நோவது?
ஏதோ கொஞ்சம் வாழும்போதே
தொட்ட்று தொட்ட்று சாவது
ரத்தம் கேட்கும் பேய் இது
ராத்திரி பகலாய் மாயுது
ஓய்வே இல்லை ஒவ்வொன்றாக
கூறு போட்டு கொல்லுது
பிறப்பதே பிழை
எனும் இழி நிலை
நல்லை இல்லா நாட்டில் தவருதே மழை
தினம் படும் வதை
மூழ்குகின்றோம் சேற்றில்
ஓர் உயிருக்கிங்கே விலை என்ன?
வெறும் கண்ணீர் சிந்தி பயன் என்ன?
தினம் நானும் நீயும் காணும் கனவுகள்
கருகி போகும் நிலை என்ன?
ஒரு திறமை இருந்தால் போதாத?
இடம் தேடி கொண்டு வாராதா?
இந்த லஞ்சம் ஊழல் ரெண்டும் இங்கே
கேட்ட வார்த்தை ஆகாதா?
வழி தேடி அலைகின்றோம்
பணிவாக வளர்கின்றோம்
தலைகீழாய் திரிகின்றோம்
திசை தெரியாமல் திணறுகிறோம்
வழி தேடி அலைகின்றோம்
பணிவாக வளர்கின்றோம்
தலைகீழாய் திரிகின்றோம்
திசை தெரியாமல் திணறுகிறோம்
சாட்சிகள் மாறலாம்
காட்சிகள் மாறுமா?
சூழ்நிலை மாறலாம்
சூட்சிகள் மாறலாம்
இனி நாம்
ஒரு தாயம் வீசி ஏணி ஏறனும்
எதிரி
அடி வாங்கி வாங்கி ஓடி போகணும்
இது வலியால் வாடிய கூட்டமடா
ஒரு புதிதான போரட்டமடா
இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை
தான சேர்ந்த கூட்டமடா
இது வலியால் வாடிய கூட்டமடா
ஒரு புதிதான போரட்டமடா
இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை
தான சேர்ந்த கூட்டமடா
தீதும் நன்றும்
சேர்ந்தே வாழும் ஊரில்
தீமை மட்டும்
ஓங்கி நிற்கும் வேலை
காற்றும் கூட
காசை கேட்க்கும் காலம்
வந்தால் என்ன
நாமும் செய்ய கூடும்?
இது தான சேர்ந்த கூட்டமடா
இது தான சேர்ந்த கூட்டமடா
இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை
தான சேர்ந்த கூட்டமடா
இது வலியால் வாடிய கூட்டமடா
ஒரு புதிதான போரட்டமடா
இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை
தான சேர்ந்த கூட்டமடா
Random Song Lyrics :
- za późno - kayah lyrics
- when i fly - david poe lyrics
- vr - kmnz lyrics
- monster - fear the gray lyrics
- heavy lunch - try me [hector boogieman & bendy wendy] lyrics
- how can i tell you - steve harley lyrics
- 让我自己飞 (rang wo zi ji fei) - 宋岳庭 (song yueting) lyrics
- untitled, 3/26/17 - sybyr lyrics
- я пацан простой (i am a simple kid) - яд добра (yad dobra) lyrics
- die in a vent (die in a fire parody) - teeheo lyrics