lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

nallai allai - a.r. rahman lyrics

Loading...

வானில் தேடி நின்றேன்
ஆழி நீ அடைந்தாய்
ஆழி நான் விழுந்தால்
வானில் நீ எழுந்தாய்
என்னை நட்சத்திரக் காட்டில் அலையவிட்டாய்
நான் என்ற எண்ணம் தொலையவிட்டாய்
நல்லை அல்லை நல்லை அல்லை
நன்னிலவே நீ நல்லை அல்லை
நல்லை அல்லை நல்லை அல்லை
நள்ளிரவே நீ நல்லை அல்லை

ஒலிகளின் தேடல் என்பதெல்லாம்
மௌனத்தில் முடிகின்றதே…….
மௌனத்தின் தேடல் என்பதெல்லாம்
ஞானத்தில் முடிகின்றதே…….
நான் உனைத் தேடும் வேளையிலே நீ
மேகம் சூடி ஓடிவிட்டாய்…….
நல்லை அல்லை நல்லை அல்லை
நன்னிலவே நீ நல்லை அல்லை
நல்லை அல்லை நல்லை அல்லை
நள்ளிரவே நீ நல்லை அல்லை

முகை முகில் முத்தென்ற நிலைகளிலே
முகந்தொட காத்திருந்தேன்…….
மலர் என்ற நிலை விட்டு பூத்திருந்தாய்
மணம் கொள்ள காத்திருந்தேன்…….
மகரந்தம் தேடி நுகரும் முன்னே
வெயில் காட்டில் வீழ்ந்துவிட்டாய்…….
நல்லை அல்லை நல்லை அல்லை
நாறும் பூவே நீ நல்லை அல்லை
நல்லை அல்லை நல்லை அல்லை
முல்லை கொள்ளை நீ நல்லை அல்லை

Random Song Lyrics :

Popular

Loading...